Paristamil Navigation Paristamil advert login

15,000 பட்டாசுகள் பறிமுதல்: சிறுவர்கள் உட்பட 176 பேர் கைது!!!

15,000 பட்டாசுகள் பறிமுதல்: சிறுவர்கள் உட்பட 176 பேர் கைது!!!

14 ஆடி 2025 திங்கள் 14:10 | பார்வைகள் : 682


பரிஸிலும் அதன் புறநகரங்களிலும் ஜூலை 14 தேசிய நாளை முன்னிட்டு நடந்த வன்முறைகளில் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பட்டாசுகளை ( tirs de mortier) காவல்துறையினரின் மீது எறிந்தல், தடுப்புகள் அமைத்தல், குப்பைகளை எரித்தல் போன்ற செயல்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு 156 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

ஒரு விளையாட்டு மையம் (ஜிம்னாசியம்) தீயில் முற்றாக அழிந்துள்ளது. இந்த தீ விபத்து, அருகிலிருந்த வாகனத்தில் ஏற்பட்ட தீயால் பரவியுள்ளது.

மொத்தம் 15,000 பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இது பாதுகாப்பு துறைக்கு மிகுந்த சவாலாக உள்ளது. இன்று இரவு நடைபெறும் வானவேடிக்கை நிகழ்வை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

176 பேரில் 43 பேர் பட்டாசுகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றும் 80 பேர் காவலில் இருக்கின்றனர், அதில் 27 பேர் 18 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்