செவ்வாய் கிரகத்திலிருந்து விழுந்த அரிய விண்கல் ஏலம்- கோடிகளில் ஏலம் எடுக்கத் தயார்

14 ஆடி 2025 திங்கள் 13:12 | பார்வைகள் : 121
செவ்வாய் கிரகத்திலிருந்து விழுந்த அரிய விண்கல் ஒன்று அமெரிக்காவில் ஏலத்தில் விடப்பட உள்ளது.
NWA 16788 என அழைக்கப்படும் அந்த விண்கல்தான் பூமியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் விண்கற்களில் பெரிய கல் ஆகும்.
15 இஞ்ச் அகலமும் 25 கிலோ எடையுமுள்ள அந்த விண்கல், 2023ஆம் ஆண்டு Niger குடியரசிலுள்ள Agadez என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் சிறுகோள் ஒன்று மோதியபோது அதிலிருந்து தெறித்த துகள்களில் ஒன்றுதான் இந்த விண்கல் என்றும், அது பூமியில் வந்து விழுந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த விண்கல் அமெரிக்காவின் நியூயார்க்கில் ஏலம் விடப்பட உள்ள நிலையில், அது 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 1,20,24,97,224.00 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.