மணிக்கு 620 கி.மீ. வேகம்., சீனாவின் Maglev மிதக்கும் ரயில் சாதனை

13 ஆடி 2025 ஞாயிறு 17:24 | பார்வைகள் : 1093
சீனா புதிதாக பரிசோதித்த மாக்லெவ் (Maglev) ரயில் உலகத்திலேயே மிக வேகமான ரயிலாக திகழ்கிறது.
இந்த ரயில் 7 வினாடிகளில் 620 கி.மீ/மணி வேகத்தை எட்டியுள்ளது. இது வெறும் சாதனை மட்டுமல்ல, எதிர்கால பயண முறையின் புரட்சி என்றும் பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் வழக்கமான சக்கரங்களைக் கொண்டு ஓடுவதில்லை. மாறாக, Magnetic Levitation தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
இதனால் தடத்தைத் தொடாமல், மிதந்தபடி, மிதமான சத்தத்துடன் பயணிக்கிறது.
பொதுவாக விமானங்கள் 885–925 கி.மீ/மணி வேகத்தில் பயணிக்கின்றன.
ஆனால் சீனாவின் புதிய ரயில் 620 கி.மீ/மணி வேகத்தில் ஓடுவதால், சில குறுகிய தூரப் பயணங்களில் இது விமானங்களை விட வேகமாக செயல்பட முடியும்.
எதிர்காலத்தில் இது 1000 கி.மீ/மணி வேகத்தையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேகத்துக்கான பரிசோதனை வெற்றிட சுரங்கத்தில் (Vacuum Tunnel) நடந்தது.
இது காற்றழுத்தத்தை குறைத்து, அதிகவேகத்தை எட்டுவதற்கான தடைகளை நீக்கியது.
இது தற்போது ஒரு மாதிரிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.
ஆனால் எதிர்காலத்தில் இதன் மூலம் பயணிகளும் சரக்குகளும் மிக வேகமாக நகர்த்தப்படலாம்.
இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, அதிநவீன போக்குவரத்துப் புரட்சி ஆகும்.