காதலனுடன் விம்பிள்டன் போட்டியை ரசித்த ஜான்வி கபூர்.. விரைவில் திருமணமா?

13 ஆடி 2025 ஞாயிறு 16:59 | பார்வைகள் : 301
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தனது காதலனுடன் விம்பிள்டன் போட்டியை ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து, இருவரும் காதலிக்கிறார்களா, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஷிகர் பஹாரியா என்பவர்தான் ஜான்வி கபூரின் காதலன் என்றும், இருவரும் விம்பிள்டன் அரையிறுதி போட்டியை ரசித்துப் பார்த்தார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் இந்த போட்டியைக் கண்டுகளித்த புகைப்படங்கள் டென்னிஸ் ஆர்வலர்களை மட்டும் இன்றி திரையுலகினர்களையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் ஏற்கனவே சில பொது நிகழ்வுகளில் தோன்றியிருந்த நிலையில், அவர்களுடைய கெமிஸ்ட்ரி இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது. அவர்கள் ஒரு பொருத்தமான காதலர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்றும், கண்டிப்பாக இது காதலாகத்தான் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஜான்வி கபூர், தற்போதுதான் தென்னிந்திய படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் திருமணம் செய்துவிட்டு தனது திரை வாழ்க்கையை தொடர்வாரா அல்லது குடும்ப வாழ்க்கையில் மட்டும் ஈடுபடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.