பாகற்காய் பூண்டு மசாலா வறுவல்!

12 ஆடி 2025 சனி 17:21 | பார்வைகள் : 115
வீட்டில் உள்ளவர்களிடம் இந்த காய் சமைக்கலாம் என்று கேட்டால் தெறித்து ஓடி விடுவார்கள்... அப்படி என்ன காய் தானே கேக்குறீங்க.. ஒரே கசப்பு வாயில வைக்கவே முடியல.. அதுதாங்க பாகற்காய்.
இன்றைக்கு பாகற்காய் பொரியல், பாகற்காய் குழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெறித்து ஓடி விடுவார்கள். காரணம், அதன் கசப்பு. கசப்பாக இருந்தாலும் பாகற்காயில் உடலுக்கு இனிப்பான பல நன்மைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட பாகற்காயை கசப்பே இல்லாமல் ஆந்திரா ஸ்டைல்ல இப்படி சமைக்கலாம்...
தேவையான பொருட்கள்:பாகற்காய் - 2 (மெல்லியதாக நறுக்கியது)எண்ணெய் - தேவையான அளவுபூண்டு - 10-12 பல் மிளகாய் தூள் - 1-2 தேக்கரண்டிதனியா, சீரகம் உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - ஒரு கொத்து. பெருங்காயம் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு புளி
செய்முறை:முதலில் பாகற்காயை மெல்லியதாக நறுக்கி அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும் .
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, தனியா, சீரகம் சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும். அதன் பிறகு 10 பூண்டு மற்றும் புளி, கறிவேப்பிலையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
அதன்பிறகு நன்றாக உலரவிட்டு ஒரு மிக்ஸி ஜாரிலில், மிளகாய் தூள் மற்றும் உப்பு, பெருங்காயம் தூள் , ஆரம்பித்த மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஏற்கனவே, உப்பு சேர்த்து நன்கு கிளறி வைத்திருந்த பாகற்காயை, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊற வைத்திருந்த பாவற்காய் சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கவும். அதன் பிறகு அரைத்து வைத்திருந்த மசாலா பவுடரை சேர்த்து, சிறிதளவு தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் வதக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பூண்டு பாகற்காய் மசாலா வறுவல் தயார்.
இருக்கும். இனி பாகற்காய் கசப்பா தான் இருக்கும் என கவலைப்படாமல் இப்படி இப்படி கசப்பே தெரியாத அளவிற்கு, அசத்தலான ஆந்திரா ஸ்டைல ஒரு வறுவல செய்து கொடுங்க..