Paristamil Navigation Paristamil advert login

பிரைம் தினத்தை குறிவைத்து மோசடி - பாதுகாப்பாக வாங்குவது எப்படி?

 பிரைம் தினத்தை குறிவைத்து மோசடி - பாதுகாப்பாக வாங்குவது எப்படி?

12 ஆடி 2025 சனி 15:51 | பார்வைகள் : 139


அமேசான் பிரைம் தினத்தை குறிவைத்து, 36,000 போலி அமேசான் தளங்களை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அமேசான் தளம், உலகளவில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களின் விருப்பமான தளங்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஜூன் 12 முதல் ஜூன் 14 வரை, அமேசான் தனது பிரைம் தின விற்பனையை(amazon prime day 2025) அறிவித்துள்ளது.

இந்த நாட்களில், அனைத்து விதமான பொருட்களிலும் பெருமளவில் தள்ளுபடி கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் பலரும் இந்த தினத்தில் பொருட்களை வாங்க வழக்கமாக திட்டமிடுவார்கள்.

இந்நிலையில், அமேசான் பிரைம் தினத்தை குறிவைத்து, 36,000 க்கும் மேற்பட்ட போலி அமேசான் வலைத்தளங்கள் மற்றும் 75,000 க்கும் மேற்பட்ட அமேசான் போலியான குறுஞ்செய்திகளை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான McAfee அறிக்கை வெளியிட்டுள்ளது.

AI உதவியுடன், அச்சு அசலாக அமேசான் தளம் போலவே போலியாக வலைதளம் மற்றும் குறுஞ்செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏமாறும் நிலை உள்ளது.

"Refund Due – Amazon System Error", “Account Problem.” என உங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் போலியான ஈமெயில்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி அதில் வரும் லிங்களை கிளிக் செய்ய வேண்டும்.

அது உங்களை போலியான அமேசான் தளத்திற்கு அழைத்து சென்று, உங்களின் பணம் மற்றும் கடவுச்சொல்லை திருட வாய்ப்பு உண்டு.

சலுகைகள், தள்ளுபடிகள் ஏதேனும் வந்தால், அமேசான் செயலியில் சரி பார்த்து உறுதி செய்துக்கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அமேசான் தளம் மற்றும் அமேசான் செயலியை மட்டும் பயன்படுத்தவும்.

இரண்டு காரணி அங்கீகாரத்தை (Two-Factor Authentication - 2FA) செயல்படுத்தவும். கடவுச்சொல்லை பாதுக்காப்பாக வைத்திருக்கவும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்