லியோ படத்தில் நடித்தது தவறு.. சஞ்சய் தத்

12 ஆடி 2025 சனி 13:44 | பார்வைகள் : 706
தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்த மாதம் அப்படம் வெளியாக உள்ளது.
இதற்கு முன்பாக விஜய் நடித்த 'லியோ' படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ். அப்படத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தில் நடித்தது குறித்து நேற்று சென்னையில் நடந்த 'கே.டி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.
“ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை நான் மதிக்கிறேன். அவர்கள் எனது சீனியர்கள். அவர்களைப் பார்த்து வளர்ந்து கற்றுக் கொண்டவன். ரஜினிகாந்துடன் நான் சில படங்களில் நடித்திருக்கிறேன். மிகவும் பணிவான ஒரு மனிதர். அது போல விஜய்யுடன் பணிபுரிந்ததையும் விரும்பினேன்.
எனக்கு ஒரு பெரிய கதாபாத்திரம் தரவில்லை என லோகேஷ் மீது எனக்கு கோபம் உண்டு. அவர் என்னை வீணாக்கிவிட்டார். அஜித் சாரை நேசிக்கிறேன், அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். நான் ரஜினி சாருடைய பல படங்களைப் பார்த்திருக்கிறேன். 'கூலி' படத்திற்காக காத்திருக்கிறேன். கமல் சாரின் 'தக் லைப்' படத்தையும் பார்க்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் அவருடைய படங்களில் மல்டி ஸ்டார் நடிக்க உருவாக்குவார். அது போல 'கூலி' படத்திலும் உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், சிறப்புத் தோற்றத்தில் அமீர் கான் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஹிந்தி நடிகரான அமீர்கான் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார்
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3