லார்ட்ஸில் ஜோ ரூட் சாதனை சதம்! முதலிடத்தில் இலங்கை ஜாம்பவான்

12 ஆடி 2025 சனி 07:33 | பார்வைகள் : 125
லார்ட்ஸ் மைதானத்தில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ஜோ ரூட் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாடி வருகிறது.
இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட் (Joe Root) தனது 37வது சதத்தினை பதிவு செய்தார்.
இதன்மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 8 சதங்கள் அடித்த குமார் சங்ககாராவுடன் (இலங்கை) 3வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் அதிக சதங்கள் விளாசியவர்கள்
மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) - 11
டான் பிராட்மேன் (அவுஸ்திரேலியா) - 9
ஜேகியூஸ் கல்லிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 9
குமார் சங்ககாரா (இலங்கை) - 8
ஜோ ரூட் (இங்கிலாந்து) - 8