மீண்டும் இலங்கைத் தமிழனாக சசிகுமார் ஜெயித்தரா ?

10 ஆடி 2025 வியாழன் 10:27 | பார்வைகள் : 323
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக கலக்கி வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அயோத்தி, நந்தன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. இதனால் சசிகுமார் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அமோக வெற்றிக்கு பின்னர் சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஃப்ரீடம். இப்படத்தை சத்ய சிவா இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே கழுகு என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கி இருக்கிறார்.
ஃப்ரீடம் திரைப்படத்தில் சசிகுமார் உடன் ஜெய் பீம் நடிகை லிஜோ மோல் ஜோஸும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலியை போல் இப்படத்திலும் நடிகர் சசிகுமார் இலங்கைத் தமிழனாக நடித்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த நெட்டிசன்கள் படத்தின் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இலங்கை தமிழர்களின் வலியை, அவர்கள் உணர்வை தொடர்ச்சியாக சொல்லி வருகிறார் சசிகுமார். ஃபிரீடம் 1996ல் வேலூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கதை. வேலூர் கோட்டையில் அவர்கள் பட்ட அடி, படம் பார்ப்பவர்கள் மனதை கலங்க வைக்கிறது. நான் கர்ணன் அல்ல, நீங்கதான் என சசிகுமாரை நோக்கி சொல்லப்படும் வசனம் செம. இவர்கள் தப்பிக்க வேண்டும். போலீசில் சிக்கவிடக்கூடாது என பார்வையாளர்களுக்கு ஏற்படும் தவிப்பு, படத்தின் பலம். நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, இயக்கம் அருமை. வேலூர் கோட்டையில் இருந்து தப்பிக்க சுரங்கம் தோண்டும் காட்சிகள், அதில் ஊர்ந்து செல்லும் காட்சிகள் மாஸ். ஆங்கில படம் பார்த்த மாதிரி இருக்கிறது. சசிகுமார் கதை தேர்வு, பாத்திர படைப்பு சூப்பர். லிஜோமோல் பாதிக்கப்பட்ட பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
ஃப்ரீடம் வெறும் படம் மட்டுமல்ல, இது இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தை மிகவும் ஆழமாகவும், எமோஷனலாகவும் திரையில் காட்டி உள்ளனர். தன் கேரியரில் மிகச்சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளார் சசிகுமார். அவரது கதாபாத்திரம் நிச்சயம் பாராட்டுக்குரியது. முதல் 10 நிமிடத்திற்கு பின் படம் வேகமெடுக்கிறது. எந்த இடத்திலும் டல் அடிக்க வில்லை. குறிப்பாக 2ம் பாதியில் கடைசி 35 நிமிடம் வேறலெவலில் உள்ளது. இது உண்மை சம்பவம், என்பதை கடைசியில் காட்டும்போது உறைந்துபோனேன். உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிந்தைய நிகழ்வுகளையும், இலங்கை அகதிகள் மீதான அதன் உடனடி தாக்கத்தையும் இந்தப் படம் பிரதீபலிக்கிறது. உண்மைச் சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு, படத்தின் முதல் பாதி சிறைபிடிக்கப்பட்ட அகதிகள் மற்றும் அவர்களின் மோசமான நடத்தையை மையமாகக் கொண்டுள்ளது. இரண்டாம் பாதியில் படம் உண்மையிலேயே உயர்ந்து ஒரு நேர்த்தியான ஜெயில் பிரேக் த்ரில்லராக மாறுகிறது என பதிவிட்டுள்ளார்.