ரஷ்யா மீது குண்டு வீசப்போவதாக மிரட்டிய ட்ரம்ப்... ரஷ்யாவின் பதில்

9 ஆடி 2025 புதன் 17:23 | பார்வைகள் : 524
ரஷ்யா மீது குண்டு வீசப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டியதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
CNN ஊடகம் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், ரஷ்யா உக்ரைனை தாக்குவதை நிறுத்துவதற்காக, தான் ரஷ்யா மீது குண்டு வீசப்போவதாக ட்ரம்ப் மிரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு ஆதாரமாக, 2024ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் பேசும் ஆடியோ ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளது CNN.
ரஷ்யாவின் பதில் ட்ரம்ப் குண்டு வீசப்போவதாக மிரட்டியதாக வெளியாகியுள்ள அந்த செய்தி குறித்து ரஷ்ய தரப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov, தன்னால் அந்த செய்தியை உறுதி செய்யவோ, மறுக்கவோ இயலாது என்று கூறினார்.
மேலும், அது உண்மையான செய்தியா அல்லது போலிச் செய்தியா என்பது கூடத் தெரியாது என்று கூறிய அவர், இப்போதெல்லாம் ஏராளமான போலிச் செய்திகள் வெளியாகின்றன என்றும் கூறியுள்ளார்.