தென் அமெரிக்காவின் சூரினாம் நாட்டின் முதல் பெண் அதிபர் தெரிவு

9 ஆடி 2025 புதன் 06:44 | பார்வைகள் : 624
தென் அமெரிக்காவில் உள்ள கடலோர நாடாக சூரினாம் உள்ளது. டச்சுக்காரர்கள் ஆட்சிக் அதிகாரத்தின் கீழ் இருந்த இந்த நாடு 1975-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது
முன்னதாக தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து பலர் அங்கு தோட்ட வேலைக்காக அடிமைகளாக கடத்தி செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கேயே அவர்கள் குடியேறி தற்போது அதிகளவில் வசித்து வருகிறார்கள்.
இந்த நாட்டின் அதிபராக உள்ள சான் சந்தோகியின் பதவிக்காலம் முடிந்தநிலையில் அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடந்தது.
இதில் ஆளுங்கட்சி சார்பில் 71 வயதான பெண் டாக்டரான ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ் போட்டியிட்டார்.
தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இதனால் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக ஜெனிபர் தேர்வாகி உள்ள நிலையில் வரும் 19 ஆம் திகதி ஜெனிபர் , தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக பதவியேற்க உள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1