Paristamil Navigation Paristamil advert login

லாராவின் 400 சாதனையை முறியடிக்காதது ஏன்? - வியான் முல்டர் சொன்ன பதில்

லாராவின் 400 சாதனையை முறியடிக்காதது ஏன்? - வியான் முல்டர் சொன்ன பதில்

8 ஆடி 2025 செவ்வாய் 14:33 | பார்வைகள் : 127


லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன் என்பது குறித்து வியான் முல்டர் விளக்கமளித்துள்ளார்.

 

கிரிக்கெட்டில் ஒரு வீரர் சாதனை நிகழ்த்துவதும், அதை மற்றொரு வீரர் முறியடிப்பதும் வழக்கமாக நடக்கும் நிகழ்வு.

 

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்திய அணியின் வீரர் பிரைன் லாரா கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான 400 ஓட்டங்கள் குவித்தார்.

 

21 ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை லாராவின் சாதனையை எந்த ஜாம்பவானும் முறியடிக்கவில்லை.

 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க வீரர் வியான் முல்டருக்கு அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், டிக்ளேர் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

 

இதில் கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு, 625 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவர் வியான் முல்டர், 367 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

 

இன்னும் 33 ஓட்டங்கள் எடுத்தால் லாராவின் மாபெரும் சாதனையை முறியடிக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் டிக்ளேர் செய்வதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

 

அதேவேளையில், அறிமுக டெஸ்டிலேயே முச்சதம் அடித்த முதல் அணித்தலைவர், அதிக ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

 

இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், "பிரையன் லாரா உண்மையிலேயே ஒரு ஜாம்பவான். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 400 ஓட்டங்கள் குவித்தார். அந்த சாதனை அவரிடமே இருக்கட்டும். மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தாலும் இதைத்தான் செய்வேன்" என கூறினார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்