டொராண்டோவில் கத்தி குத்துக்கு இலக்காகிய 14 வயது சிறுவன்

8 ஆடி 2025 செவ்வாய் 13:33 | பார்வைகள் : 185
டொராண்டோ கிழக்கு பகுதியில் கடந்த வார இறுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 14 வயது சிறுவன் அடூல் அசிஸ் சார் என போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர்.
டொராண்டோவில் இதுவரையில் சுமார் 19 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவம் ஜூலை 5 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10 மணிக்கு கொக்ஸ்வெல் அவென்யுவிற்கு மேற்கே ஈஸ்டர்ன் மற்றும் வுட்வர்ட் அவென்யூக்கள் சந்திக்கும் பகுதியில் உள்ள வுட்பைன் பூங்காவுக்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு உள்ள ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையின் அருகே ஒரு சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக விரைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக டொராண்டோ போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இன்னும் சந்தேகநபர்களின் விவரங்களை வெளியிடவில்லை.கைது எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
இந்த கொலையின் பின்னணி மற்றும் காரணம் தொடர்பாகவும் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.