Paristamil Navigation Paristamil advert login

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

7 ஆடி 2025 திங்கள் 19:08 | பார்வைகள் : 1158


ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கிளர்ச்சியாளர்கள் தங்கியுள்ள மூன்று துறைமுகங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கி வரும் நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

ஈரானால் ஆதரிக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருவதால் இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்