Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இணைந்த SJ சூர்யா & A R ரஹ்மான் கூட்டணி!

மீண்டும் இணைந்த SJ சூர்யா & A R ரஹ்மான் கூட்டணி!

7 ஆடி 2025 திங்கள் 12:03 | பார்வைகள் : 1270


ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிப்பில் அவருக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தற்போது தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக உள்ளார்.

கடைசியாக அவர் இசை என்ற படத்தை இயக்கி நடித்தார். அதன்பிறகு இயக்கத்துக்கு ஒரு பெரிய இடைவெளியை விட்டார்.  இந்நிலையில் எஸ் ஜே சூர்யா தான் வெகு நாட்களாக இயக்கவேண்டும் என ஆசைப்பட்ட கில்லர் படத்தினை தற்போது தொடங்கியுள்ளார். இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் நடந்தது.

படத்தை கோகுலம் மூவிஸ் கோபாலன் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் எஸ் ஜே சூர்யா. இது சம்மந்தமாக தயாரிப்பாளரோடு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக இன்று எஸ் ஜே சூர்யா அறிவித்துள்ளார். இதன் மூலம் ‘நியூ’ மற்றும் ‘அன்பும் ஆருயிரே’ ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்