புதிய உலக சாதனை படைத்த வணிந்து ஹசரங்கா! வரலாற்றில் முதல் வீரர்

7 ஆடி 2025 திங்கள் 11:01 | பார்வைகள் : 459
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையை வணிந்து ஹசரங்கா படைத்துள்ளார்.
வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
முதல் முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வங்காளதேசத்தின் தன்வீர் இஸ்லாம் (Tanvir Islam) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தப் போட்டியில் 60 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அவர் புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் (Shaun Pollock) 68 போட்டிகளில் (அதிவேகமாக) 100 விக்கெட் மற்றும் 1000 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
ஆனால், ஹசரங்கா 65 போட்டிகளிலேயே 100 விக்கெட், 1000 ஓட்டங்கள் எடுத்து அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த சாதனையை படைத்த 70வது வீரர் வணிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) ஆவார். எனினும், ஒரே போட்டியில் இரண்டையும் முடிக்கும் அரிய வாய்ப்பை ஹசரங்கா தவறவிட்டார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1