கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்து - 5 பேர் காயம்

7 ஆடி 2025 திங்கள் 09:01 | பார்வைகள் : 180
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
வட ஸ்கார்பரோவில், மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கும் வாகன ஓட்டுநர், நிறுத்தியிருந்த பல வாகனங்களையும், ஒரு பாதசாரியையும் மோதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம், இரவு 9 மணி அளவில் மில்லிகன் (Milliken) பகுதியில், பாஸ்மோர் அவென்யூ மற்றும் மிடில்ஃபீல்ட் சாலைக்கு அருகில் நடந்தது.
இந்த விபத்தில் 10 வாகனங்கள் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில வாகனங்களில் மக்கள் இருந்தபோதும், அந்த வாகனங்களை மோதி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்திற்கு பிறகு, அந்த ஓட்டுநர் தப்பிசெல்ல முயன்றாலும், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாரதி ஒரு ஆண் என்பதைத் தவிர வேறு தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் 7 பேரை பரிசோதித்தனர், அவர்களில் 5 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேவேளை, ஒரு பெண் பாதசாரியும் மோதப்பட்டு சிறிது காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அனைவருக்கும் ஏற்பட்ட காயங்கள் லேசானவை என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.