Paristamil Navigation Paristamil advert login

கத்தாருக்கு செல்லும் இஸ்ரேலிய தூதுக்குழு!ஹமாஸுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை

கத்தாருக்கு செல்லும் இஸ்ரேலிய தூதுக்குழு!ஹமாஸுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை

6 ஆடி 2025 ஞாயிறு 18:27 | பார்வைகள் : 202


இஸ்ரேல் ஹமாஸுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு தூதுக்குழுவை கத்தாருக்கு அனுப்பும் என்பதை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த திட்டத்தில் ஹமாஸ் "ஏற்றுக்கொள்ள முடியாத" மாற்றங்களை செய்துள்ளதாக நெதன்யாகு கூறிய போதிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு, ஹமாஸ் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தத்திற்கு "நேர்மறையான பதில்" அளித்ததாகவும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தது.

ஒரு நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் சண்டைகள் மீண்டும் தொடங்கப்படாது என்ற முக்கிய உத்தரவாதம் உட்பட, ஒப்பந்தத்தில் திருத்தங்களை ஹமாஸ் கோரியுள்ளதாக ஒரு பாலஸ்தீனிய அதிகாரி தெரிவித்தார்.

மறுபுறம், தொடர்ச்சியான மோதல் காசாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஃநஃஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அல்-மாவாசி பகுதியில் உள்ள கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் ஒரு மருத்துவர் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் ஒரு உதவி அமைப்பான காசா மனிதாபிமான அறக்கட்டளையின் (GHF) இரண்டு அமெரிக்க ஊழியர்கள், கான் யூனிஸ் பகுதியில் உள்ள தங்கள் தளத்தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் காயமடைந்தனர்.

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்