நெத்திலி கருவாடு பொரியல்

6 ஆடி 2025 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 119
கருவாடு ரகத்திலேயே நெத்திலியை தான் அனைவருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த நெத்திலி கருவாடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இந்த கருவாடு வைத்து தொக்கு, ஊறுகாய், வறுவல் என வித்தியாசமாக சமைக்கலாம். சுடு சாதம், பழைய கஞ்சி என அனைத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் : தேவையான நெத்திலி கருவாடுகாய்ந்த குண்டு மிளகாய் - 4 பூண்டு - 4 ( பல்)கருவேப்பில்லை தாளிப்பதற்கு எண்ணெய்
செய்முறை: முதலில் கருவாடு எடுத்து தலை மற்றும் வயிற்று பகுதியை நீக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு சுத்தம் செய்த கருவாடை மூன்று முறை சுத்தமான தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் மண் சட்டியை வைத்து நன்றாக காய்ந்த பிறகு, தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்த கருவாடு அதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
முக்கியமாக கருவாடு சேர்த்த உடன் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அதன் பிறகு கருவாடு கொஞ்சம் வெந்ததும் அதனுடன் தேவையான அளவு காரத்துக்கேற்ப மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நன்றாக வதக்கி கருவாடு முக்கா பாதத்திற்கு வந்தவுடன் எடுத்து வைத்திருந்த பூண்டை தட்டி சேர்த்துக் நன்றாக வதக்க வேண்டும். கருவாடு முழுசா வெந்ததும், கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சூப்பரான சுவையான "நெத்திலி கருவாடு பொரியல்" ரெடி.இதனை அப்படியே சூடு சாதம் அல்லது பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சொர்க்கம் மாதிரி இருக்குங்க. "சாதம் ஒரு புடி....கருவாடு ஒரு கடி".... என சாப்பிடலாம்.