Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் நிலநடுக்கங்கள் - அச்சத்தில் மக்கள்

ஜப்பானில் நிலநடுக்கங்கள் - அச்சத்தில் மக்கள்

6 ஆடி 2025 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 223


ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அகுசேகி - ஜிமா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கடலுக்கு அடியில் சுமார் 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.

இருப்பினும், நிலநடுக்கத்திற்குப் பின்னர் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவில் வசிக்கும் 23 பேரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தீவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டோஷிமா கிராம அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், டோஷிமா கிராமத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், ஜப்பான் நேரப்படி நேற்று காலை அகுசேகி-ஜிமா தீவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோகாரா தீவுகளுக்கு அருகில் கடந்த மாதத்திலிருந்து நில அதிர்வுகள் அதிகமாக இருப்பதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்