Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் தோல்வியை ஏற்க முடியாது... சீனா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் தோல்வியை ஏற்க முடியாது... சீனா

6 ஆடி 2025 ஞாயிறு 14:45 | பார்வைகள் : 231


உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோல்வியடைவதை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதரிடம் தெரிவித்தார்.

இது அமெரிக்கா தனது முழு கவனத்தையும் சீனாவின் மீது திருப்ப அனுமதிக்கும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்யா - உக்ரைன் போரில் நடுநிலைமை வகிக்கும் சீனாவின் பொது நிலைப்பாட்டிற்கு இது முரணானது என்றே கூறப்படுகிறது.

புதன்கிழமை பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத் தலைவர் காஜா கல்லாஸுடன் நான்கு மணி நேர சந்திப்பின் போது சீனா இந்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

நான்கு மணி நேரம் நீண்ட அந்த சந்திப்பில், சைபர் பாதுகாப்பு, அரிய கனிம வளங்கள் முதல் வர்த்தக வேறுபாடுகள், தைவான் மற்றும் மத்திய கிழக்கு வரை விரிவான அளவிலான சிக்கல்களை உள்ளடக்கிய கடுமையான ஆனால் மரியாதைக்குரிய விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவிக்கையில், சீனாவுடனான அதன் போட்டியில் அமெரிக்கா கவனம் செலுத்துவதைத் தடுக்கும் வகையில் உக்ரைனில் நீடித்த போரை சீனா விரும்பக்கூடும் என்பதை வாங்கின் தனிப்பட்ட கருத்துக்கள் குறிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் வெள்ளிக்கிழமை சீன வெளிவிவகார அமைச்சகத்தின் வழக்கமான விளக்கக் கூட்டம் ஒன்றில் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் தெரிவிக்கையில், உக்ரைன் பிரச்சினையில் தலையிட சீனா விரும்பவில்லை.

உக்ரைன் நெருக்கடியில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது, அதாவது பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் மற்றும் அமைதி. நீடித்த உக்ரைன் நெருக்கடி யாருடைய நலன்களுக்கும் உதவாது.

சர்வதேச சமூகத்துடன் இணைந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரின் விருப்பத்தின் பேரில், இந்த நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

2022ல் உக்ரைன் மீதான போர் தொடங்கும் சில வாரங்கள் முன்னர் சீனத் தலைவர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுடன் எல்லையற்ற கூட்டாண்மையை அறிவித்தார், அதன் பின்னர் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்பெற்றுள்ளன.

ரஷ்யாவிற்கு கிட்டத்தட்ட இராணுவ ஆதரவை வழங்குவதாக அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளையும் சீனா நிராகரித்துள்ளது. இந்த நிலையில் ஏவுகணை உற்பத்தியில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களை ரஷ்யாவிற்கு வழங்கியதற்காக பல சீன நிறுவனங்களுக்கு உக்ரைன் தடை விதித்துள்ளது.

ரஷ்யா பயன்படுத்திய Geran 2 ட்ரோன் பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதை உக்ரைன் உறுதி செய்துள்ளது. வட கொரிய துருப்புக்கள், ஈரானிய ஆயுதங்கள் மற்றும் சில சீன உற்பத்தியாளர்கள் உட்பட மற்றவர்களை ஈடுபடுத்தும் அதே வேளையில், புடின் தனது போரையும் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறார் என்றே உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் ஆன்ட்ரி சிபிஹா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் பாதுகாப்பு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்