காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு!

6 ஆடி 2025 ஞாயிறு 07:46 | பார்வைகள் : 215
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவில் உள்ள மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஸாவில் போர் நிறுத்தத்திற்கான திட்டம் குறித்து ஹமாஸ் “உடனடியாக” பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராக இருக்கும் நிலையில் , அங்கு இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸின் சகாவான இஸ்லாமிய ஜிஹாத், காசாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான திட்டங்களை ஆதரிப்பதாகக் கூறுகிறது.
இதேவேளை, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 57,268 பேர் கொல்லப்பட்டு 135,625 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.