Paristamil Navigation Paristamil advert login

ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் ரஜினி?

ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் ரஜினி?

5 ஆடி 2025 சனி 16:40 | பார்வைகள் : 194


கூலி பட மேடையில்தான் ரஜினிகாாந்த் அடுத்து பேசப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். கூலி பாடல் வெளியீட்டு விழா தள்ளிப்போகிறது. ஆனாலும் அடுத்த வாரம் ஒரு மேடையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினி பேசப் போகிறார். அது, மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலின் ஒரு லட்சமாவது பிரதி விற்ற வெற்றி விழா. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த் மட்டுமல்ல, இயக்குனர் ஷங்கரும் பேசப்போகிறார்.

ஏற்கனவே, வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் இருக்கிறார் ஷங்கர். சூர்யா, சில இந்தி நடிகர்களிடம் பேசியநிலையில் எதுவும் நடக்கவில்லை. இப்போது இருவரும் நாவல் சம்பந்தப்பட்ட விழாவில் ஒன்றாக கலந்து கொள்வதால் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறாரோ அல்லது அவரே ஹீரோவா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. அடுத்தவாரம் விழா மேடையில் இதற்கான விடை கிடைக்கலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்