சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்.... P-8 Poseidon விமானத்தை வாங்கிய தென் கொரியா

5 ஆடி 2025 சனி 17:22 | பார்வைகள் : 273
இந்தியாவைப் போன்று தென் கொரியா, P-8 Poseidon எனும் கடலோர கண்காணிப்பு விமானத்தை வாங்கியுள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்குப் பிறகு, சீனாவின் மற்றொரு எதிரியான தென் கொரியா, அமெரிக்காவின் நவீன கடலோர கண்காணிப்பு விமானமான P-8 Poseidon-ஐ அதிகாரப்பூர்வமாக இயக்கத் தொடங்கியுள்ளது.
P-8A Poseidon என்பது 'Submarine Killer' என அழைக்கப்படும் ஒரு உயர் திறன் வாய்ந்த கடற்படை விமானமாகும்.
இது 907 கிமீ/மணிக்கு வேகத்தில் பறக்கக்கூடியது மற்றும் துரித விமானம், நீண்ட ரேஞ்ச், மிகச் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் செயல்படக்கூடியது.
பழமையான P-3 விமானங்களை மாற்றவும், வட கொரியாவிலிருந்து வரும் கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறனை மேம்படுத்தவும், தென் கொரியா P-8A Poseidon-ஐ வாங்கியுள்ளது.
6 விமானங்கள் ஜூன் 2024-ற்குள் பெற்றுக்கொள்ளப்பட்டு, ஓராண்டு பயிற்சி முடிவடைந்த நிலையில் தற்போது முழுமையாக இயக்கத்திற்கு தயாராகியுள்ளது.
இந்தியா இந்த விமானங்களை 2020-ம் ஆண்டு கல்வான் வாடி மோதல் மற்றும் 2017-ம் ஆண்டு டோக்லாம் நிலவரம் போன்ற முக்கிய தருணங்களில் சீன படைகளின் இயக்கங்களை கண்காணிக்க பயன்படுத்தியது.
தற்போது இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா என இந்தோ-பசிபிக் மண்டலத்தில் நான்கு நாடுகள் இதை இயக்கி வருகின்றன.
இந்த விமானத்தின் முக்கிய அம்சங்கள்:
907 கிமீ வேகம்
120 sonobuoy வீசும் திறன்
நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணித்து அழிக்கும் திறன்
எதிரி கப்பல்களுக்கு நேரடி தாக்குதல்
தென்கொரியாவின் இந்த அப்டேட்டால் சீனாவும் வடகொரியாவும் அதிர்ச்சியில் உள்ளன, ஏனெனில் இப்போது தங்களது கடற்படை நகர்வுகள் மிக நெருக்கமாக கண்காணிக்கப்படலாம்.