Paristamil Navigation Paristamil advert login

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்

3 ஆனி 2022 வெள்ளி 16:51 | பார்வைகள் : 12151


 உடலின் எந்தப் பகுதியிலாவது செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிப்பது புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. 10 இந்தியர்களில் ஒருவர் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

 
மற்ற நாடுகளை விட நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
 
புகையிலை: புகையிலை பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிகரெட் பிடிப்பது மட்டுமின்றி வெற்றிலை பாக்கு உட்கொள்வது, சுருட்டு, பீடி பிடிப்பது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தொண்டை வழி யாக வயிற்று பகுதிக்கு சென்றடைந்து ஓசோபேஜியல் எனும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும். புகையிலை பயன்படுத்துவது குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல், கருப்பைவாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
 
காரமான, சூடான உணவு: உணவை அதிக சூடாகவோ, காரமாகவோ சாப்பிடக்கூடாது. காரமான, சூடான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நுரையீரல், வாய், வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும். உணவில் காரத்தன்மை கொண்ட மசாலாக்களை அதிகம் சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்க்கும், காரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆராய கூடுதல் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
 
தாய்ப்பால்: தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதோ அல்லது மிகவும் குறைவாக கொடுப்பதோ புற்றுநோய்க்கு திறவுகோலாக மாறிவிடும். எனவே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
 
அதிக சூரிய வெளிச்சம்: உடலில் சூரிய வெப்பம் அதிகமாக படர்வது செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வித்திடும். 18 வயதுக்குட்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகுவது பாதிப்பை அதிகப்படுத்திவிடும். தீக்காயங்கள், எக்ஸ்ரே கதிர்களின் வெளிப்பாடு, சில வேதிப்பொருட்களின் தாக்கத்தால் சருமத்தில் வடுக்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுக்கும், சரும புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதை தவிர்ப்பது நல்லது.
 
செயலற்ற தன்மை: உடல் இயக்கம் இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மது அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் மதிப்பீடு செய்துள்ளது. உடற்பயிற்சி செய்யாதது, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற காரணங்களால் நிறைய பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
 
நார்ச்சத்து: நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது, அதனை குறைவாக உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்