ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்!

5 ஆடி 2025 சனி 12:58 | பார்வைகள் : 157
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்த பலரும் வியந்து பாராட்டியது அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை தான். அவர் இயக்கிய முதல் படம் இதுதான். ஆனால் பார்ப்பதற்கு அதுபோல் தெரியவில்லை என்று பலரும் பாராட்டினார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் நடித்தும் இருந்தார் அபிஷன். அவரின் கதாபாத்திரம் படத்தில் மிகவும் எமோஷனலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்துவிட்டார் அபிஷன். இப்படி இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அசத்தி பாராட்டுக்களை பெற்றார் அபிஷன்.
இந்நிலையில், அவர் அடுத்ததாக ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாக உள்ள படத்தை அவருடன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய் ஒருவர் தான் இயக்க உள்ளாராம். அப்படத்திற்கு கரெக்டட் மச்சி என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் முதல் படமான கோமாளியில் சின்ன கேமியோ ரோலில் நடித்த பின்னர், அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். தற்போது அபிஷன் ஜீவிந்தும் அந்த ரூட்டில் பயணிக்கிறார். பிரதீப்பை போல் அவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.