148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து

5 ஆடி 2025 சனி 12:28 | பார்வைகள் : 420
இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 10 விக்கெட்களை இழந்து 587 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக, இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் இரட்டை சதம்(269) அடித்தார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 10 விக்கெட்களை இழந்து, 403 ஓட்டங்களை குவித்தது. ஹாரி ப்ரூக் 158 ஓட்டங்களும், ஜேமி ஸ்மித் 184 ஓட்டங்களும் குவித்தனர்.
இதில், இங்கிலாந்து அணியின் 6 வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல், டக் அவுட் ஆகினர். டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 6 வீரர்கள் டக் அவுட் ஆகுவது இங்கிலாந்து அணிக்கு இதுவே முதல் முறையாகும்.
இந்தியா தரப்பில், முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 400 ஓட்டங்களை கடந்தது இது இரண்டாவது முறையாகும்.
2010 ஆம் ஆண்டு, லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு 47 ஓட்டங்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி, 446 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்தது.