தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த ரஷ்யா

4 ஆடி 2025 வெள்ளி 11:09 | பார்வைகள் : 217
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது.
அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர், இதை ஒரு "தைரியமான" முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கும் ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதுவருக்கும் இடையில் 04-07-2025 சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போதே ரஷ்ய அரசாங்கத்தின் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ரஷ்யாவின் இந்த முடிவு குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர், "நேர்மறையான உறவுகள், பரஸ்பர மரியாதை மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் ஒரு புதிய கட்டம்" என்றும், இந்த மாற்றம் மற்ற நாடுகளுக்கு "ஒரு எடுத்துக்காட்டாக" இருக்கும் என்றும் கூறினார்.