இந்தியாவில் Google Veo 3 அறிமுகம்- Gemini மூலம் 8 வினாடி AI வீடியோக்கள் உருவாக்கம்

4 ஆடி 2025 வெள்ளி 11:09 | பார்வைகள் : 129
Google I/O நிகழ்வில் அறிமுகமான Veo 3, தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Google Gemini AI Pro சந்தா மூலம் வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய AI வீடியோ உருவாக்க கருவி, பயனாளர்கள் உருவாக்கும் சிறப்பான வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
Veo 3 மூலம், பயனர்கள் 8 வினாடி வரை ஓடும் வீடியோக்களை, அதில் ஒலி, சிறப்பான பின்னணி இசை, செயற்கை குரல்கள் மற்றும் தனித்துவமான காட்சிகள் உடனடியாக உருவாக்க முடியும். இது ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Google, வீடியோ உருவாக்கம் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய கண்காணிப்பு, அனுமதி விதிகள், மற்றும் அழியாத SynthID டிஜிட்டல் வாட்டர் மார்க் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இதனால் உருவாக்கப்படும் வீடியோக்கள் AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.
Gemini ஆப்பில் Feedback வசதி மூலம் பயனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தல்கள் செய்யப்படும் என Google அறிவித்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன், பாரம்பரிய வரலாற்று நிகழ்வுகள், மாயா உயிரினங்கள், அல்லது உணர்வுப்பூர்வ காட்சிகள் போன்றவை தற்போது உங்கள் கற்பனை உலகத்திலிருந்து நேரடி உருவாக்கமாக மாறும்.