திருமணமான 10 நாளில் பிரபல கால்பந்து வீரர் உயிரிழப்பு

4 ஆடி 2025 வெள்ளி 11:09 | பார்வைகள் : 133
கால்பந்து வீரர் தியாகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்துள்ளர்.
28 வயதான தியாகோ ஜோட்டா(Diogo Jota), போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் முன்னணி வீரர் ஆவார்.
2019 மற்றும் 2025 நேஷன்ஸ் லீக் கோப்பையை போர்ச்சுக்கல் வெல்வதில் ஜோட்டா முக்கிய பங்கு வகித்தார்.
மேலும், லிவர்பூல் அணிக்காக 49 ஆட்டங்களில் விளையாடி, 14 கோல்களைப் போட்டுள்ளார்.
இவர் கடந்த ஜூன் 22 ஆம் திகதி தனது காதலியான Rute Cardoso என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உண்டு.
இந்நிலையில், கால்பந்து வீரரான தனது சகோதரர் ஆண்ட்ரேவுடன், ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ஜமோரா மாகாணத்தில் உள்ள செர்னாடில்லா நகராட்சியில், இன்று லம்போர்கினி காரில் பயணம் சென்றுள்ளார்.
மற்றொரு காரை முந்திச்செல்லும் போது, காரின் டயர் வெடித்ததால் அது சாலையை விட்டு விலகி தீப்பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில், தியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரேவும் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தியாகோ ஜோட்டாவின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.