Paristamil Navigation Paristamil advert login

சிக்காக்கோவில் துப்பாக்கி சூடு - 4 பேர் பலி

சிக்காக்கோவில்  துப்பாக்கி சூடு - 4 பேர் பலி

4 ஆடி 2025 வெள்ளி 06:27 | பார்வைகள் : 4151


அமெரிக்காவின் சிக்காக்கோவில் 3-7-2025 இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு, 14 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இரவுநேர களியாட்ட நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்கள், அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்தபோதே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரவு 11 மணியளவில் குறித்த இரவுநேர களியாட்ட நிலையத்தைக் கடந்து சென்ற சிற்றூந்து ஒன்றிலிருந்தே, இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 24 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட, நான்கு பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்தும் தகவல் வெளியாகவில்லை.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்