Paristamil Navigation Paristamil advert login

டென்மார்க்கில் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை அறிமுகம்

டென்மார்க்கில் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை அறிமுகம்

3 ஆடி 2025 வியாழன் 14:55 | பார்வைகள் : 199


டென்மார்க்கில் பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகின்பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க ராணுவம் வைத்துள்ளது. சில நாடுகளில் ராணுவ ஆட்சியையும் நடைபெற்று வருகிறது.

சில நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டாய ராணுவ சேவையில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கிலும், 18 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை உள்ளது. தற்போது, பெண்களுக்கும் கட்டாய ராணுவ சேவையை அமுல்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதன்படி, 18 வயது நிரம்பிய பெண்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டாய ராணுவ சேவையாற்ற அனுமதிக்கப்பட உள்ளனர்.

முதற்கட்டமாக விருப்பம் தெரிவித்த பெண்களின் பெயர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். அதன் பின்னர் விருப்பம் தெரிவிக்காத பெண்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

நோயுற்றவர்கள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கு விலக்களிக்கப்பட உள்ளது. இந்த புதிய விதிகள் ஜூலை 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு 18 வயதை அடையும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

2026 முதல், கட்டாய இராணுவ சேர்க்கை காலம் 11 மாதங்களாக நீட்டிக்கப்படும். முதல் 5 மாதங்கள் விரிவான அடிப்படைப் பயிற்சியைக் கொண்டிருக்கும், இது கட்டாய இராணுவச் சேர்க்கையாளர்களுக்கு வலுவான இராணுவ அடித்தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மீதமுள்ள 6 மாதங்கள் இராணுவம், கடற்படை, விமானப்படை அல்லது சிறப்பு நடவடிக்கை கட்டளைக்குள் செயல்பாட்டு கடமைகளை உள்ளடக்கும்.

6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட டென்மார்க்கில், 25,400 பேர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்