செங்கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து

3 ஆடி 2025 வியாழன் 08:03 | பார்வைகள் : 284
செங்கடலில் எகிப்தின் ரஸ் ஹர்பெல் நகர் அருகே சூயஸ் கால்வாய் பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் கடலின் அடிமட்டத்தை துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
கப்பலில் 30 ஊழியர்கள் பணியாற்றினார். அந்த கப்பலில் நேற்று திடீரென விபத்து ஏற்பட்டதில் கப்பல் கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் கப்பலில் பணியாற்றிய 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 22 பேர் சிறு காயங்களுடன் மீட்கபட்டனர். எஞ்சிய 4 பேர் கடலில் மூழ்கி மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.