Paristamil Navigation Paristamil advert login

சோமாலியாவில் விமான விபத்து - மூவர் பலி

சோமாலியாவில் விமான விபத்து - மூவர் பலி

3 ஆடி 2025 வியாழன் 07:03 | பார்வைகள் : 205


சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவில் அல் - ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான உள்நாட்டுப் போரில், அரசுக்கு ஆதரவாக அமைதி காக்கும் பணியில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், மொகடிஷு நகரில் உள்ள விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விமானத்தில் ஏழு பேர் இருந்ததாகவும் ஏனையவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்