Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவில் மேம்பாலம் இடிந்ததில் கவிழ்ந்த ரயில்- 7 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் மேம்பாலம் இடிந்ததில் கவிழ்ந்த ரயில்- 7 பேர் உயிரிழப்பு

1 ஆனி 2025 ஞாயிறு 07:17 | பார்வைகள் : 742


ரஷ்யா-உக்ரேன் எல்லைக்கு அருகே ரயில் ஒன்று தடம் புரண்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு புறப்பட்ட ரயில், பிரையன்ஸ்க் பகுதியில் விபத்திற்குள்ளானது.

இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு உக்ரைனின் எல்லையான ரஷ்யாவின் பிரையன்ஸ்க்கில் இந்த விபத்து நடந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ரயிலின் ஓட்டுநரும் ஒருவர் என தெரிய வந்துள்ளது.  

முதற்கட்ட விசாரணையில், 'சட்டவிரோத குறுக்கீடு' காரணமாக பாலம் இடிந்து விழுந்ததையடுத்து, ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி சென்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்திற்குள்ளான இந்தப் பக்தி ரஷ்யாவின் உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதால் இது சதிச்செயலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.      

 

வர்த்தக‌ விளம்பரங்கள்