Paristamil Navigation Paristamil advert login

துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!

துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!

28 வைகாசி 2025 புதன் 13:00 | பார்வைகள் : 4512


ஓரிரு நாட்களில் தனது 18 ஆவது பிறந்ததினத்தை கொண்டாட இருந்த இளைஞன் ஒருவன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

மார்செய்யின் 14 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் மே 27, நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள போதைப்பொருள் விற்பனை இடம்பெறும் பகுதி என குறிப்பிடப்படும் Cité des Rosiers பகுதியில் மகிழுந்தில் நின்றிந்த குறித்த இளைஞனை நெருங்கிய ஆயுததாரிகள் இருவர் இளைஞனை நோக்கி சுட்டனர். இதில் குறித்த நபர் கழுத்தில், நெஞ்சில் குண்டு பாய்ந்து பலியானார்.

ஆயுததாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

விசாரணைகளை மார்செய் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்