காதல் தோல்வியில் 40 வரையான மகிழுந்துகளை உடைத்த சிறுவர்கள்!

27 வைகாசி 2025 செவ்வாய் 19:28 | பார்வைகள் : 1571
இரு சிறுவர்கள் இணைந்து நாற்பது வரையான மகிழுந்துகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். காதல் தோல்வி விரக்தியில் இச்செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். அவர்கள் தெற்கு பிரான்சின் Perpignan நகரில் மே 23-24 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட இரவில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துகளை சேதமாக்கியுள்ளனர். மகிழுந்துகளின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மொத்தமாக 40 மகிழுந்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கமராக்களில் ஆதாரங்களோடு குறித்த இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது, “காதல் தோல்வி விரக்தியில் அதுபோல் செயற்பட்டதாக” தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.