பிரான்சின் யுத்த விமானங்களுடன் இந்தியாவின் சொந்தப் போர் விமானங்கள்!!

27 வைகாசி 2025 செவ்வாய் 19:14 | பார்வைகள் : 2183
பிரான்ஸின் ஆயுத ஏற்றுமதியின் 28 சதவீத்தினை கொள்வனவு செய்த இந்தியா, தற்காப்புத் துறையில் தன்னாட்சியை வளர்த்துக்கொள்வதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உள்ள எல்லைத்தொகுதிகளில் நிலவும் பதற்றம் இதற்குக் காரணமாகும்.
பிரெஞ்சு Rafale விமானங்களுடன், மூன்று வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட எல்லைச் சண்டைக்குப் பின்னர், இந்திய பாதுகாப்பு அமைச்சகம், ஒரு 5வது தலைமுறை முன்னேற்றப்பட்ட ரகசிய யுத்தவிமானத்தின் (AMCA) மாதிரியை உருவாக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தது.
இந்த திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகத்துக்குள் செயல்படும் 'விமான மேம்பாட்டு நிறுவனம்' (ADA)
முன்னெடுக்கிறது. இது தன்னாட்சியான விண்வெளி உற்பத்தியில் இந்தியாவின் ஒரு முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த AMCA விமானம்:
25 தொண் எடை
உள் ஏற்றம் – 1.5 தொண், வெளி ஏற்றம் – 5.5 தொண்
மொத்த எரிபொருள் திறன் – 6.5 தொண்
ரகசிய (stealth) மற்றும் சாதாரண (non-stealth) இரு வடிவங்களிலும் உருவாக்கப்படும்
இந்தியாவின் Hindustan Aeronautics Ltd நிறுவனம் ஏற்கனவே விமானத்தின் முதல் முனை பகுதியை தயாரித்துள்ளது