Paristamil Navigation Paristamil advert login

10 பில்லியன் யூரோக்கள் முதலீட்டில் - நீர்மூழ்கி கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலை!!

10 பில்லியன் யூரோக்கள் முதலீட்டில் - நீர்மூழ்கி கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலை!!

27 வைகாசி 2025 செவ்வாய் 15:50 | பார்வைகள் : 924


பிரான்சின் மின்சார பரிமாற்ற வலையமைப்பு (Réseau de Transport d'Électricité - RTE) நிறுவனம் 10 பில்லியன் யூரோக்கள் செலவில் பிரம்மாண்டமான தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.

கடலுக்கு அடியினால் மின்சாரத்தைக் கொண்டுசெல்லக்கூடிய இராட்சத நீர்மூழ்கி கம்பிகளை (câbles) உருவாக்கக்கூடிய தொழிற்சாலையே அதுவாகும். 2030 - 2035 ஆம் ஆண்டுகளை இலக்குவைத்து எதிர்கால திட்டம் இதுவாகும். இதனை உருவாக்குவதன் மூலம் பிரான்சுக்கு வெளியே மின்சார ஆலைகளை, காற்றாலைகளை அமைத்து அங்கிருந்து மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான அனுமதியை அரசு வழங்கவேண்டும் எனவும், அனுமதிக்காக காத்திருக்கிறோம் எனவும் RTE அறிவித்துள்ளது. ஜூன் 16 ஆம் திகதி இது தொடர்பான விவாதம் செனட் சபையில் செனட்டர் Daniel Gremillet முன்னெடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்