தபால் நிலையத்தினை உடைத்து€420,000 கொள்ளை.. மூவருக்குச் சிறை!!

27 வைகாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1922
தபால் நிலையத்தை உடைத்து €420,000 யூரோக்கள் பணத்தினை கொள்ளையிட்ட மூவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மே 19 ஆம் திகதி அன்று ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் மே 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 44 தொடக்கம் 63 வயது வரையுள்ள மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கொள்ளையர்கள் €420,000 யூரோக்களுடன் தப்பிச் சென்றிருந்தனர்.
கொள்ளைச் சம்பவம் சென்றவருடம் டிசம்பர் 23 ஆம் திகதி காலை 6 மணிக்கு Toulouse ( Haute-Garonne ) நகரில் உள்ள தபால் நிலையத்தில் இடம்பெற்றது. Toulouse நகர நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.