மிகக் கொடூரமான செயல் - முன்னாள் அறுவைசிகிச்சை மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம்!!

27 வைகாசி 2025 செவ்வாய் 00:33 | பார்வைகள் : 2379
நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஜொயல்-லு-ஸ்குவார்நெக் (JOËL LE SCOUARNEC) இன் வழக்கு விசாரணை கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளது.
299 நோயாளிகள் மீது பாலியல் வன்முறை மற்றும் பாலியல் வனபுணர்வு செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட ஸ்குவார்நெக் மீது. 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நேற்று 2025 மே 26 திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கில் இறுதி முறையீடு செய்த
அவர், நான் நீதிமன்றத்திடம் எந்த கருணையும் கேட்கவில்லை, ஒரு சிறந்த மனிதனாக மாறுவதற்கான உரிமையை எனக்கு வழங்குங்கள், எனக்கு இல்லாத மனிதநேயத்தின் பகுதியை ஏற்றுக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்,'
என்றும் கேட்டுக்கொண்டார்.
'இவ்வளவு கொடூரமான செயல்களுக்கு இலக்காகிய பெண்கள் மற்றும் ஆண்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். என் குற்றங்கள், அவர்களை மற்றும் அவர்களின் குடும்பங்களை எவ்வளவு வேதனைக்குள்ளாக்கியிருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.' எனவும் தனது இறுதி வார்த்தைகளை இந்த குற்றவாளியான முன்னாள் சத்திரசிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
வழக்குரைஞர் வாதம்
அவரால் எதுவும் மறைக்கப்படவில்லை என்றும், அவர் தன்னைக் குற்றவாளி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் வழக்குரைஞர் கூறியுள்ளார்
இவர் தனது முதலாவது வழக்கிலிருந்தே முழுமையாக ஒத்துழைத்துள்ளார்.
நீதிமன்றம் எதிர்பார்க்கும் அளவிற்கு அவற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார், எனினும் இந்த நிலைப்பாட்டில் அவரது பாதுகாப்பு தரப்பும் உள்ளது.
அவர் காட்டிய 'உண்மைத்தன்மை' மற்றும் 'நிராகரிப்பில்லாத ஒப்புதல்' ஆகியவற்றை சாதகமானதாக பரிசீலிக்கப்பட வேண்டும் என வழக்குரைஞரால் வாதாடப்பட்டது.
இதற்கான இறுதித் தீர்ப்பு இந்த புதன்கிழமை (மே 28, 2025) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.