பொய்ப் புட்டின் - மக்ரோன்!

26 வைகாசி 2025 திங்கள் 17:52 | பார்வைகள் : 1873
'உக்ரைனில் நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாததும் மிகக் கடுமையானதும். ஒருவர் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு குண்டுவீசக்கூடாது. இந்த இரட்டை மொழி, நடந்த பேச்சுவார்த்தைகள் உண்மைத் தன்மையற்றவையாக இருந்ததை காட்டுகிறது,' என ஹனோயிலிருந்து பிரெஞ்சு குடியரசுத் தலைவர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
'புட்டின் சமாதானத்திற்கு தயாராக இருக்கிறேன் என்று ட்ரம்பிடம் கூறியபோது, அவர் பொய் சொன்னார் என்பதைக் ட்ரம்ப் இப்போது உணர்கிறார் என்று நான் நினைக்கிறேன்,' என்றும் மக்ரோன் கூறினார்.
மேலும், 'மிக நீடித்த ஒரு போர் நிறுத்தத்தையும் மக்ரோன் வலியுறுத்தி உள்ளார்.
மற்ற ஐரோப்பிய தலைவர்களைப் போலவே, மக்ரோனும் புடினுக்குப் போர் நிறுத்தத்திற்கான இறுதி கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதற்கு பின் மீறினால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.