Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸில் சலபிஸ்டுகள் செல்வாக்கு பெற புதிய உத்திகளை பின்பற்றுகிறார்கள் – உள்துறை அமைச்சு எச்சரிக்கை!!

பிரான்ஸில் சலபிஸ்டுகள் செல்வாக்கு பெற புதிய உத்திகளை பின்பற்றுகிறார்கள் – உள்துறை அமைச்சு எச்சரிக்கை!!

26 வைகாசி 2025 திங்கள் 16:52 | பார்வைகள் : 1833


பிரான்ஸில் சலபிஸ்டுகள் (அனைத்து நாடுகள் மீதும் தங்களிள் இஸ்லாமியவாதத்தை மீள் நிறுத்துவதுடன் மற்றையவர்களை வெறுக்கும் அமைப்பினர்) தங்கள் செல்வாக்கை அதிகரிக்க புதிதாக மசூதிகள் கட்டுவதற்குப் பதிலாக, ஏற்கனவே இயங்கும் வழிபாட்டு இடங்களில் மெதுவாக ஊடுருவி, உள்ளாட்சித் தேர்தல்களில் வென்று, கட்டுப்பாட்டை பெறுகிறார்கள் எனஉள்துறை வெளியிட்ட ஒரு ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

JDD  வெளியிட்ட இந்த அறிக்கையில், 2023ல் 114 சலபிஸ்ட் வழிபாட்டு இடங்கள் உள்ளதாகவும், இதுவரை 31,000 பேர் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. PACA மற்றும் Auvergne-Rhône-Alpes  பகுதிகள் முக்கிய மையமாக உள்ளன.

இந்த ஆவணத்தின் படி, கடந்த ஆண்டில் 114 சலபிஸ்ட் வழிபாட்டு இடங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2019 முதல் நிலையாக இருந்தாலும் 2014 இனை ஒப்பிடும் போது அதிகரித்துள்ளது. இந்த இடங்களில் வரும் மக்கள் எண்ணிக்கை 2020 முதல் 39% உயர்ந்துள்ளதாகவும், தற்போது 31,000-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

PACA மற்றும் Auvergne-Rhône-Alpes பகுதிகளில் மட்டும் சுமார் 60 சலபிஸ்ட் மசூதிகள் உள்ளன. Mureaux, Roubaix, மற்றும் Fréjus நகரங்களில் பெரும்பேர் திரண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம். 100 சலபிஸ்ட் இமாம்களை அடையாளம் கண்டுள்ளது. இவர்களில் பலர் வெளிப்படையாக வன்முறையை நிராகரிக்கும்போதும், பெண்கள் மற்றும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்துகளை தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்துள்ளனர். முஸ்லிம்கள் அலலாதோர் மீது வெறுப்பபையும் விரோதத்தையும் இரகசியமாக வளர்த்து வருகின்றனர்.

மேலும், சமூக ஊடகங்களில் தடை செய்யப்பட உள்ள முஸ்லீம் சகோதர இயக்கத்துடன் சலபிஸ்ட்கள் இணைந்து "salafo-fréristes எனப்படும் புதிய பரப்புரைகளை செலுத்துகிறார்கள்.

இந்த மாற்றங்கள், உள்துறை அமைச்சு அவதானிக்கக் கூடிய முக்கிய நிலையாகக் காணப்படுகின்றன. இது மதவாதக் கடுமையின் மீள்பிறப்பையும், சமூகத்தில் அதன் செல்வாக்கை ஊன்றும் திறனையும் அதன் பாரிய ஆபத்தினையும் வெளிப்படுத்துகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்