'ட்ரம்பின் கோபம் செயல்களாக மாற வேண்டும்' – மக்ரோன் கோரிக்கை!!

26 வைகாசி 2025 திங்கள் 15:02 | பார்வைகள் : 2087
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ரஸ்யாவை நோக்கிய 'கோபம்', செயல்களில் தீவிரமாக வெளிப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது, உக்ரைனில் நடந்த இரத்தக்களரியான ரஸ்யாவின் தாக்குதல்களுக்குப் பிந்தைய எதிர்வினையாகும்.
«கடந்த சில மணி நேரங்களாகவே, டொனால்ட் ட்ரம்பின் ரஸ்யாவை நோக்கி ஒரு எரிச்சல் மற்றும் கோப உணர்வு வெளிப்பட்டதை நாம் பார்த்தோம். எனது வேண்டுகோள் மிகவும் எளியது அந்த கோபம் செயல்களில் மாறவேண்டும்»
என மக்ரோன் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா - உக்ரைன் போரில், சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கே முரணான செயற்பாடுகளே நிகழ்ந்துள்ளன.