அமெரிக்கர்கள் குடியேற விரும்பும் நாடுகளின் பட்டியல்.. பிரான்ஸ் எத்தனையாவது இடம் தெரியுமா..??!!

26 வைகாசி 2025 திங்கள் 13:05 | பார்வைகள் : 1697
”அமெரிக்கர்கள் குடியேற விடும்பும் நாடுகளின் பட்டியல்” எனும் கருத்துக்கணிப்பு ஒன்றை அமெரிக்க தொலைக்காட்சியான CNBC அண்மையில் மேற்கொண்டிருந்தது.
இந்த கருத்துக்கணிப்பில் அமெரிக்கர்கள் வாழ்வதற்கு மிகவும் பிடித்தமான நாடுகளின் பட்டியலில் முதலாவதாக உள்ளது போர்த்துக்கல் ஆகும். இந்த பட்டியலில் இரண்டாவதாக ஸ்பெயின் உள்ளது. மூன்றாவதாக பிரித்தானியா உள்ளது. அதன் தொடர்ச்சியாக, கனடா, கிரீஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக உலகில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வந்துசேரும் நாடான பிரான்ஸ் இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
அதன் பின்னர் ஒஸ்ரியா, லக்ஸம்பேர்க், பெல்ஜியம், ஸ்லோவேனியா, நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளும் பட்டியலில் உள்ளன.