உழவு இயந்திரங்களுடன் பாராளுமன்றத்தை முடக்கும் விவசாயிகள்!

26 வைகாசி 2025 திங்கள் 10:00 | பார்வைகள் : 1918
ஒருபக்கம் வாடகை மகிழுந்து சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போக்குவரத்துக்களை பாதிக்க, மறுபக்கம் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் அரச திணைக்களங்கள், பாராளுமன்றம் போன்றவற்றின் செயற்பாடுகளை முடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இன்று மே 26, திங்கட்கிழமை காலை முதல் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். FNSEA மற்றும் Jeunes agriculteurs (JA) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
தலைநகர் பரிசில் 150 தொடக்கம் 200 பேர் தங்களது உழவு இயந்திரத்தின் மூலம் பாராளுமன்றத்தை முடக்க உள்ளனர்.