முதலாவது ’தங்கக் காலணி’ விருதை பெற்றுக்கொண்டார் Kylian Mbappé !

26 வைகாசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 1503
பிரெஞ்சு உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé தனது முதலாது ‘ஐரோப்பிய தங்கக் காலணி’ விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.
62 அணிகள் மோதும் La Liga உதைபந்தாட்ட போட்டியில் இந்த பருவகாலத்தில் மட்டும் Mbappé, 34 போட்டிகளில் விளையாடி 31 கோல்களை அடித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக இருக்கும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த Viktor Gyökeres, 39 கோல்களை அடித்துள்ள போதும் அவை “குறைந்த சிரமங்களைக் கொண்டது” (sont moins valorisés) எனும் காரணத்தினால் விருது Mbappé க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களின் பின்னர் இந்த விருதை பிரெஞ்சு உதைபந்தாட்ட வீரர் ஒருவர் பெற்றுக்கொள்கிறார். முன்னதாக 2005 ஆம் ஆண்டு Thierry Henry இதனை பெற்றுக்கொண்டிருந்தார்.