Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனிசம் முடிந்துவிட்டது' – அரசு பேச்சாளர் கூறியதற்கு எதிர்ப்பு!!

மக்ரோனிசம் முடிந்துவிட்டது' – அரசு பேச்சாளர் கூறியதற்கு எதிர்ப்பு!!

26 வைகாசி 2025 திங்கள் 00:06 | பார்வைகள் : 339


தெவனோ, ஒரு பேட்டியில் 'மக்ரோனிசம் முடிவுக்கு வந்துவிட்டது' என்று கூறியிருந்தார். இதற்கு முன்னாள் பிரதமர் எலிசபெத் போர்ன், தற்போதைய அரசுப் பேச்சாளர் பிரிஸ்கா தெவனோ மன்னிப்புக் கேட்கும்படி கோரியுள்ளார்.

'இது அருவருப்பான மற்றும் மரியாதையற்ற குறிப்பு,' என எலிசபெத் போர்ன் கூறியுள்ளார். அவருடைய கூற்றுப்படி, 2017ஆம் ஆண்டு மக்ரோன் தொடங்கிய மையவாத, முன்னேற்றவாத இயக்கத்தின் அடையாளத்தை இவ்வாறு நிராகரிக்க முடியாது.

பிரிஸ்கா தெவனோ, ஒருபுறம், மக்ரோனின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரித்தாலும், கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'மக்ரோனிசம் என்பது ஒரு கட்டத்தில் முடிந்துவிட்டது. நாம் புதிய ஒன்றை தொடங்க வேண்டும்,' என்று கூறியிருந்தார்.

இது பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மக்ரோனின் ஆதரவாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ரெனசோன்ஸ் மற்றும் மோதெம் உறுப்பினர்கள், இந்தக் கருத்து மக்ரோனின் அரசியல் பாரம்பரியத்தையே நிராகரிக்கும் வகையில் உள்ளது எனக் கூறியுள்ளனர்.

'மக்ரோனிசம் என்பது இன்னும் ஒரு அரசியல் திட்டமாக உயிருடன் உள்ளது. அதனை நாங்கள் நிராகரிக்க மாட்டோம்' என ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

அரசுப் பேச்சாளர் மக்ரோனிசம் முடிந்துவிட்டது என கூறியது, முன்னாள் பிரதமர் எலிசபெத் போர்ன் மற்றும் பலரிடையே கடுமையான எதிர்வினைகளை தூண்டியுள்ளது.

ஆனால் மொதெம் இந்தக் கருத்திற்கு எதிர்வினை ஆற்றியதாக எலிசபெத் போர்ன் தெரிவித்தாலும், மொதெம் கட்சியின் இரண்டாவது தலைவரான மார்க் பெஸ்னே, வலதுசாரிகளுடன் சாயும் மக்ரோனிசத்தை அழிக்கவேண்டும் என்று கூறியதும் எண்ணிப்பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்