Courbevoie: இரண்டு எக்கோகிறாபி இயந்திரங்கள் திருட்டு!
25 வைகாசி 2025 ஞாயிறு 21:27 | பார்வைகள் : 6067
Courbevoie நகரில் உள்ள ஷாராஸ் மருத்துவ சோதனை மையத்தில் (Le centre d’imagerie médicale Charras) சனிக்கிழமை இரவு, இரண்டு எக்கோகிறாபி இயந்திரங்கள் (appareils d’échographie) திருடப்பட்டுள்ளன.
திருடர்கள் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இழப்பின் மதிப்பு சுமார் 60,000 யூரோக்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
பெரும்பாலும் திட்டமிட்டு செயல்படும் கும்பல்களால், இத்தகைய திருட்டுகள் தற்போது தவிர்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. பல்வேறு மாகாணங்களில் உள்ள ரேடியோலொஜி மற்றும் மகப்பேறு மையங்கள் (cabinets de radiologie et d’obstétrique) திருடர்களின் இலக்காகியுள்ளன.
இவை அனைத்தும் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள கறுப்பு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏனெனில் இவற்றின் சீரியல் எண்கள் காரணமாக பிரான்சில் அவற்றை சட்டபூர்வமாக விற்பது சாத்தியமில்லை.
இது போன்ற திருட்டுகள் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை குறிவைத்து ஒரு சட்டவிரோத சர்வதேச சந்தையை உருவாக்கியுள்ளது.
"Le Dauphiné" பத்திரிகையின் தகவல்படி, கடந்த கோடை காலத்தில் இஸேர் பகுதியில் உள்ள ஒரு சோதனை மையத்தில் வாகனத்தைக் கொண்டு கதவுகளை இடித்து உள்ளே நுழைந்து கருவிகளை திருடிய சம்பவம் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan