விக்ராந்த் நடித்த 'வில்' டீசர்..!

25 வைகாசி 2025 ஞாயிறு 18:43 | பார்வைகள் : 178
தளபதி விஜய்யின் உறவினரான விக்ராந்த் நடித்த 'வில்' என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு ’கற்க கசடற' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவர், கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் ’லால் சலாம்’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
தற்போது, அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மதராஸி' என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், விக்ராந்த் முக்கிய இடத்தில் நடித்துள்ள 'வில்' என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இது ஒரு திரில்லர் அம்சம் கொண்ட படம் என்பது, டீசர் காட்சிகளில் இருந்து தெளிவாகத் தெரிய வருகிறது. சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில், இந்த படத்தில் விக்ராந்த், மோகன் ராமன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவராமன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த டீசரில் ஒரு காட்சியில், "சனாதனம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா? இரண்டும் வேண்டாமா? இதெல்லாம் முடிவு பண்ண வேண்டியது அவங்களோ, நீயோ, நானோ அல்ல... ஓட்டு போடறான் பாருங்க, அவன்.. அதை புரிஞ்சுக்கனும் முதல்ல!" என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.